செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது
Update: 2023-11-19 08:12 GMT
அரகண்டநல்லுார் அடுத்த வடகரைதாழனுாரைச் சேர்ந்தவர் நடேசன், இவரது மகன் முருகன், 32. இவர், திருக்கோவிலுார் -விழுப்புரம் சாலையில், கடந்த 24ம் தேதி தாழனுார் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக பைக்கில் சென்ற இரண்டு வாலிபர்கள் முருகனை மிரட்டி அவரிடம் இருந்த மொபைல் போனை பறித்துச் சென்றனர். அரகண்டநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், தனியார் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் என தெரிய வந்தது. இருவரும் முருகனின் மொபைல்போனை பறித்து சென்றதை ஒப்புக் கொண்டனர். இது குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர்.