20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் பங்க் அமைக்கும் பணிக்கு
பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் ( லிமிடெட் ) திருச்சி மண்டலம் குன்னம் கிளையில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் பங்க் அமைக்கும் பணிக்கு கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் இரா பொன்முடி , இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முதன்மை மேலாளர் சிவசங்கரன் ஆகியோர் அடிக்கல்;
பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் ( லிமிடெட் ) திருச்சி மண்டலம் குன்னம் கிளையில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் பங்க் அமைக்கும் பணிக்கு கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் இரா பொன்முடி , இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முதன்மை மேலாளர் சிவசங்கரன் ஆகியோர் அடிக்கல் நாட்டினார்கள். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் ( லிமிடெட் ) திருச்சி மண்டலம் குன்னம் கிளையில், இந்திய ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் பங்க் அமைக்கும் பணிக்கு கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர் திரு .இரா பொன்முடி அவர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முதன்மை மேலாளர் திரு. சிவசங்கரன் அவர்கள் ஆகியோர் இன்று (13.06.2025) அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்து, குன்னம் கிளை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குன்னம் சட்டமன்ற தொகுதியில் இருக்கும் குக்கிராமங்களுக்கும் பேருந்து வசதி பரவலாக கொண்டு சேர்க்கும் வகையிலும், ஒரு சில கிராமங்களுக்கு பேருந்து வசதிகள் இருந்தாலும் பள்ளி கல்லூரி பயிலும் மாணவர்கள் சென்று வருவதற்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், குன்னம் பகுதி மக்களுக்காக புதிய பேருந்து பணிமனை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்கள். இந்த அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மினாசாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் புதிய பேருந்து பணிமனை 14.03.2024 அன்று திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது ஆட்சி காலத்தில் அறிவிக்கப்படும் திட்டங்கள் எல்லாம் வெறும் அறிவிப்போடு மட்டுமில்லாமல் அதனை குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட்டும் வருகிறது. அதற்கு குன்னம் பேருந்து பணிமனையும் ஒரு உதாரணமாகும். குன்னம் பேருந்து பணிமனையினை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்தில், பணிமனைக்கு வரும் பேருந்துகளுக்கு அங்கேயே எரிபொருட்கள் நிரப்ப தேவையான நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் 20,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் பங்க் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கு கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர் அவர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முதன்மை மேலாளர் அவர்கள் ஆகியோர் இன்று (13.06.2025) அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, குன்னம் கிளையில் ரூ.1,29,000 மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் மற்றும் ரூ.3,75,000 மதிப்பில் பேருந்து பராமரிப்பு பணி பார்க்க புதிதாக அமைக்கப்பட்ட கிரீஸ் பிட் ஆகியவற்றினையும் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழக கும்பகோண கோட்ட பொது மேலாளர் சிங்காரவேலன், (தொழில்நுட்பம்), திருச்சி மண்டல பொது மேலாளர் சதீஷ்குமார், முதன்மை நிதி அலுவலர் சந்தானகிருஷ்ணன், துணை மேலாளர்கள் ரவி,புகழேந்தி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மேலாளர் பரத் ஸ்ரீ மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.