200 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
திண்டுக்கல் மாநகராட்சி வரி செலுத்தாத 200 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி, மாநகராட்சி கடைகளின் வாடகை உள்ளிட்டவை வசூல் செய்வதற்கு அதிகாரிகள், பணியாளர்களை கொண்ட 11 குழு அமைக்கப்பட்டு வரி வசூல் நடக்கிறது. வரி செலுத்தாத வீடுகளிலும் குடிநீர் இணைப்பை துண்டிக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒரே மாதத்தில் வரி செலுத்தாத 200 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதற்கிடையே நிலுவையில் உள்ள வரியை செலுத்தும்படி சம்பந்தப்பட்ட நபர்களின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் மற்றும் தபால் மூலம் 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு வருகிறது. அதன் பின்னரும் வரி செலுத்தாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை துண்டிக்கவும், கடைகளை 'சீல்' வைக்கவும் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.