200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலம்

அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ முருகன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலம் விமர்சையாக நடைபெற்றது.;

Update: 2025-07-11 18:24 GMT
பாளையம் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ முருகன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலம் விமர்சையாக நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, பாளையம் கிராமத்தில் எழுந்து அருள் பாலித்து வரும், அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ முருகன் திருக்கோவில் ஜீர்னோத்தாரண அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா வருகிற 13-ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதனையொட்டி (11ஆம்தேதி) வெள்ளிக் கிழமை மாலை 5 மணிக்கு தேரோடும் வீதி வழியாக முளைப்பாரி எழுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி பாளையம் கிராமத்தில் வடக்குத் தெருவில் இருந்து ஏற்கனவே தயார் செய்திருந்த முளைப் பாரியை மஞ்சள் ஆடை உடுத்திய 200க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் சுமந்தபடி, அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் இருந்து, தேரோடும் வீதி வழியாக மேளதாளங்களுடன், வான வேடிக்கையுடன் ஊர்வலமாக எடுத்துவந்தனர். நிறைவாக அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் முன்பு பக்தி பாடல்களை பாடி கோவிலை வளம் வந்த பின்னர் ஊர்வலம் நிறை வடைந்தது. இந்த நிகழ்ச்சியில் பாளையம் கிராம மக்கள் மட்டுமின்றி குரும்பலூர், பெரம்பலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Similar News