2000 டென் நெல் மூட்டைகள் ராணிப்பேட்டைக்கு பயணம்
மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து 2000 நெல் மூட்டைகள் ராணிப்பேட்டை டி என் சி எஸ் சி கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது
Update: 2024-02-19 05:17 GMT
மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் கொள்முதல் பணிகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் செய்து வருகிறது. 172 கொள்முதல் நிலையங்களில் இருந்து வாங்கப்படும் நெல் மூட்டைகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எடமணல், அரசூர் போன்ற நிரந்தர கிடங்குகளில் அடுக்கி வைக்கப்படுவதுடன் வெளி மாவட்ட நெல் அரவை மில்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வாடிக்கை. 20 ஆயிரம் டன்நெல் மூட்டைகள் ஏற்கனவே வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது 11ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து ராணிப்பேட்டை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கிற்கு 2000 டன் நெல் மூட்டைகள் அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து லாரிகள் மூலம் ஏற்றப்படும் நெல் மூட்டைகள் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.