2025-26ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை நேரலையாக நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்கள் உள்ளிட்ட 14 இடங்களில் மக்களுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நிகழ்வினை நேரலையாக பெரம்பலூர் மாவட்டத்தின் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் பொதுமக்கள் காணும் வகையில் 14 இடங்களில் இன்று நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.;

Update: 2025-03-14 17:56 GMT
  • whatsapp icon
பெரம்பலூர் மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை நேரலையாக நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்கள் உள்ளிட்ட 14 இடங்களில் மக்களுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களால் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் இன்று (14.03.2025) தாக்கல் செய்யப்பட்டது. இச்சிறப்பு வாய்ந்த 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நிகழ்வினை நேரலையாக பெரம்பலூர் மாவட்டத்தின் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் பொதுமக்கள் காணும் வகையில் 14 இடங்களில் இன்று நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள், ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம், இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர் தொழில்நுட்பம், தமிழ்நாடெங்கும் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிற்பூங்காக்கள், புதிய நகரம், புதிய விமான நிலையம், புதிய நீர்த்தேக்கம், அதிவேக ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்டது. இச்சிறப்பு அம்சங்களில் ஒன்றான பெரம்பலூர் மாவட்டத்திற்கு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பும், நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் முன்முயற்சிகள், விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் எண்ணற்ற திட்டங்கள், மாணவர்களின் பசிப்பிணி போக்கும் காலை உணவுத் திட்டம், இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்களுக்கு உரிதைதொகை வழங்குதல், மகளிர் நலன் பேணிக் காக்கும் தொழில் முனைவோர் திட்டங்கள், உயர்கல்வியை ஊக்குவிக்கும் திட்டங்கள் மற்றும் கல்லூரிகள், பழங்குடியினர் வாழ்வாதார கொள்கை, உள்ளிட்ட அறிவிப்புகள் மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களால் அறிவிக்கப்பட்டதை செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் புதிய பேருந்து நிலையத்தில் திரையிடப்பட்டதை சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களும், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் திரையிடப்பட்டதை சுமார் 2,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும், குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திரையிடப்பட்டதை சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் பார்வையிட்டனர். மேலும், பெரம்பலூர் நகராட்சியின் சார்பில் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம், புதிய பேருந்து நிலையத்திலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் மூலம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொளக்காநத்தம், மேலமாத்தூர், பாடாலூரிலும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எறையூர், வாலிகண்டபுரத்திலும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகரம்சீகூரிலும், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவாச்சூர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட 14 இடங்களில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வுகளை ஏராளமான பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூறியது போன்ற ‘எல்லோர்க்கும் எல்லாம்’ எனும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளமாக தமிழ்நாடு பட்ஜெட் 2025 அமைத்துள்ளதாக நேரலையில் பார்வையிட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பெரும்பாலோனோர் தெரிவித்தனர்.

Similar News