தஞ்சாவூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கு 204 பணியாளர்கள் நியமனம்

தஞ்சாவூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கு 204 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.;

Update: 2024-06-03 15:21 GMT

தஞ்சாவூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கு 204 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கு 204 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) நடைபெறவுள்ளது.  இதில், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  வாக்கு எண்ணும் பணிக்கு மொத்தம் 204 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. அதிகபட்சமாக திருவையாறு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 23 சுற்றுகளும், தஞ்சாவூர், மன்னார்குடி, ஒரத்தநாடு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தலா 21 சுற்றுகளும், பட்டுக்கோட்டை தொகுதிக்கு 20 சுற்றுகளும், குறைந்தபட்சமாக பேராவூரணி தொகுதிக்கு 19 சுற்றுகளும் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.  வாக்கு எண்ணிக்கையின் கடைசி சுற்றுகளில் மேஜைகளின் எண்ணிக்கை குறைந்துவிடும். இப்பணியில் ஈடுபடும் பணியாளர்கள் கணினி மூலமாக மே 27 ஆம் தேதி முதல் கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து கணினி மூலம் இரண்டாம் கட்டத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்திலும், சுற்றுப் பகுதிகளிலும் ஏறத்தாழ 2 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

Tags:    

Similar News