தஞ்சாவூர் அருகே பள்ளி ஆண்டு விழா !
தஞ்சாவூர் அருகே மழழையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் 20ஆவது ஆண்டுவிழா பள்ளி தாளாளர் ரமணிபாய் அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-15 12:32 GMT
ஆண்டு விழா
தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி சிந்தாமணிக் குடியிருப்பு எதிரில் உள்ள நியூவிஷன் மழழையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் 20ஆவது ஆண்டுவிழா பள்ளி தாளாளர் ரமணிபாய் அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக, தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன், பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் உதயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். நிகழ்வில், சரபோஜி கல்லூரி பேராசிரியர் பாஸ்கரன், பல்மருத்துவர் பிரவின், மகாத்மா பள்ளி தாளாளர் பால் தண்டாயுதபாணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் லயன் பாண்டியன், சரவணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். யோகா ஆசிரியை ஜோஸ்பின் ஞான ஒளி தொகுத்து வழங்கினார். உதவித் தலைமையாசிரியை அன்பரசி ஆண்டறிக்கை வாசித்தார். முன்னதாக பள்ளி ஆசிரியை லலிதா வரவேற்றார். நிறைவாக, ஆசிரியை சரஸ்வதி நன்றி கூறினார். பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.