21வது வார்டில் மாநகராட்சி மேயர் ஆய்வு
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 21வது வார்டுக்கு உட்பட்ட திரிபுரசுந்தரி அம்மன் கோவில் தெரு, ஊரணி சாஸ்தா கோவிலை சுற்றி சாலை அமைத்தல்,பொது தண்ணீர் குழாய் அமைத்தல் உள்ளிட்ட இடங்களை மேயர் ராமகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்பொழுது 21வது வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.