உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 2.10 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 2.10 லட்சம் பறிமுதல்.

Update: 2024-03-28 05:46 GMT

வாகன சோதனை

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்ப்பட்ட சென்னை, மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு இடங்களில்  தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி போரூர் ஜங்ஷன் பகுதியில் சென்னையில் இருந்து குரோம்பேட்டை நோக்கி சென்ற காசிநாதன் வயது 62 என்ற நபரின் காரை சோதனை செய்ததில் 76 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் சென்னை ராமாபுரத்தில் ராயலா நகர் மெயின் ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த பெருமான் (37) ஃபைனான்ஸ் தொழில் செய்யும் நிலையில் அவர் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்ததாக ரூபாய் 71 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்தனர். அதே போல் போரூர் சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்த போது காரில் வந்த ஹரி என்வரிடம் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்தாக ரூ. 63 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மதுரவாயல் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News