21.82 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Update: 2023-10-25 13:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தேனியில் அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீரபாண்டி அருகே உள்ள வீட்டு வசதி வாரிய அரங்கில் தேனி மாவட்டத்தில் கலைஞர் உரிமைத்தொகை வீட்டுமனை பட்டா மருத்துவம் வேளாண் உள்ளிட்ட 18 பிரிவுகளில் 2813 பயனாளிகளுக்கு 21.82 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் ஷாஜீவனா தலைமையிலும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் முன்னிலை வகித்தனர். முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மேள தாளங்கள் முழங்க சிலம்பாட்டம் நாட்டு புற ஆடலுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News