வெறி நாய்கள் கடித்து 22 ஆடுகள் சாவு!!

கயத்தாறு அருகே அரசன்குளம் கிராமத்தில் வெறி நாய்கள் கடித்து 22 ஆடுகள் உயிரிழந்தன.;

Update: 2024-05-25 07:10 GMT

ஆடுகள் சாவு

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள அரசன்குளம் கிராமம் பள்ளிக்கூடத் தெருவில் வசித்து வருபவர் மாரியப்பன் என்பவரின் மகன்கள் முருகன், சுப்புராஜ் ஆகிய இருவரும் விவசாயம் மற்றும் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன.

இவர்கள் அரசன்குளம் கிராமத்திற்கு மேற்கே தரிசு காட்டில் ஆடுகளுக்கு பெரிய முள் வேலிகள் அமைத்து அங்கேயே ஆடுகளை இரவில் அடைத்து பின்னர் காலையில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வர். இந்நிலையில் நேற்று இரவு 10க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் கும்பலாக ஆட்டு தொழுவில் உள்ளே புகுந்து 22ஆட்டு குட்டிகளை கடித்துக் குதறியது.

இதில் 22 ஆடுகளும் பரிதாபமாக இறந்தன. இதனால் மனவேதனையடைந்த ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் வெறி நாய்களை உடனடியாக அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கிராமத்தில் மட்டும் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வளர்த்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 60சதவித மக்கள் ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News