223 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்!
புதுக்கோட்டை நகர் பகுதியில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 223 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Update: 2023-12-23 11:26 GMT
புதுக்கோட்டை நகர் பகுதியில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் காரில் கடத்தி செல்லப்படுவதாக மாவட்ட எஸ்பி யின் தனி படை போலீஸ் யாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் திலகர் திடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை இட்டனர். காருக்குள் ரூபாய் மூன்று லட்சம் மதிப்புள்ள 223 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. காரில் வந்த திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த தீபக் ராஜா வயது 25, கணவாய் பட்டியை சேர்ந்த கோபிநாத் வயது 24 ஆகிய இருவரை கைது செய்து டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். டவுன் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிந்து விசாரணை விசாரித்து வருகின்றனர்.