திருப்பூர் மாவட்டத்தில் 23,44,810 வாக்காளர்கள்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார் . மாவட்டத்தில் மொத்தம் 23 லட்சத்து 44 ஆயிரத்து 810 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

Update: 2024-01-22 06:00 GMT

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு 

 2024 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024 மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி அக்டோபர் மாதம் 27ஆம்  முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை பொதுமக்களிடம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பெயர் சேர்த்தல் , நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவங்கள் பெறப்பட்டது. இந்நிலையில் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

இதில் தாராபுரம் , காங்கேயம் , அவினாசி , திருப்பூர் வடக்கு , திருப்பூர் தெற்கு, பல்லடம் ,உடுமலைப்பேட்டை , மடத்துக்குளம் உள்ளிட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்ந்து ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 50 ஆயிரத்து 110 , பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 94 ஆயிரது 358 மூன்றாம் பாலினத்தவர்கள் 342 என 23 லட்சத்து 44 ஆயிரத்து 810 வாக்காளர்கள் இருப்பதாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட மாநில மற்றும் தேசிய அரசியல் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்த நிலையில் அவர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

Tags:    

Similar News