மதுரையில் தேர்தல் பறக்கும் படையினரால் 2,31,061 ரூபாய் பறிமுதல்
மதுரையில் மீன் வியாபாரியிடம் தேர்தல் பறக்கும் படையினரால் 2,31,061 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-21 10:15 GMT
பணம்
மதுரையில் தேர்தல் பறக்கும் படையினரால் 2,31,061 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் பறக்கும் படையினர் 70 குழுவாக மதுரை மாவட்டம் முழுவதும் வானங்களில் சோதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை குருவிக்காரன் சாலை பகுதியில் வட்டாட்சியர் திருமலை தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை வந்த அசிம் என்பவரிடம் 2,31,061 லட்சம் ரூபாய் பணம் உரிய ஆவணம் இன்றி இருந்ததால் அதனை பறிமுதல் செய்து வடக்கு கருவூலத்தில் ஒப்படைத்தனர். பணம் கொண்டு வந்த நபர் தான் மீன் வியாபாரம் செய்வதாகவும் மீன்விற்ற பணம் என்று கூறியுள்ளார். ஆனால் உரிய ஆவணம் இல்லாத காரணத்தினால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.