கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 231.4 மிமீ., மழை பதிவு

கிருஷ்ணகிரியில் 231.4 மிமீ., மழை பதிவாகி உள்ளது மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2024-05-18 06:41 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 231.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது மாவட்ட நிர்வாகம் தகவல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 231.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இதில் குறிப்பாக அஞ்செட்டி சுற்றுவட்டாரத்தில் 20.6 மி,மீ மழை பதிவாகியுள்ளது, பாரூர் 11.8மி,மீ, தேன்கனிக்கோட்டை 49 மி,மீ, கிருஷ்ணகிரி 26.4மி,மீ, நெடுங்கள் 7.2 மி,மீ, பெனுகொண்டாபுரம் 4.2மி,மீ, போச்சம்பள்ளி 22மி,மீ, ராயக்கோட்டை 29மி,மீ, சூளகிரி 7மி,மீ, ஊத்தங்கரை 5.4 மி,மீ, சின்னாறு அணை11மி,மீ, கே ஆர் பி அணை 37.8மி,மீ என மாவட்டம் முழுவதும் 231.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது மாவட்டத்தில் சராசரியாக 14.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags:    

Similar News