மார்ச் 23, 24 வேட்பு மனு தாக்களுக்கு அனுமதி இல்லை நிர்வாகம் அறிவிப்பு !

வருகின்ற மார்ச் 23, 24 வேட்பு மனு தாக்களுக்கு அனுமதி இல்லை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2024-03-21 11:10 GMT

மாவட்ட நிர்வாகம்

தமிழகத்தில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேனி தேர்தல் பிரிவு அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான படிவங்களை 20 பேர் வாங்கிச் சென்ற நிலையில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் மார்ச் 23 நான்காவது சனிக்கிழமை என்பதாலும் மார்ச் 24 ஞாயிறு அரசு விடுமுறை தினம் என்பதாலும் அன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்ய இயலாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News