அங்காள பரமேஸ்வரி கோவிலில் 23ம் ஆண்டு பால்குடத் திருவிழா
மயிலாடுதுறை அங்காள பரமேஸ்வரி கோவிலில் 23ம் ஆண்டு பால்குடத் திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.
மயிலாடுதுறை காமராஜர் சாலையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் குலதெய்வகாரர்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் 23ஆம் ஆண்டு பால்குட திருவிழா இன்று நடைபெற்றது. கோயிலில் சிறப்பு யாகம் செய்யப்பட்டு காவிரி துலாக்கட்டத்திலிருந்து விரதம் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் ஏராளமானோர் பால்குடம் அழகு காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக பம்பை உறுமி மேளதாள வாத்தியங்கள் முழங்க ஆலயம் வந்தடைந்தனர்.
ஆலயத்தை சுற்றி வந்த பக்தர்கள் பக்தி பரவசத்தில் நடனம் ஆடினர். தொடர்ந்து பால்குடத்தை அம்மன் சன்னதியில் இறக்கி வைத்து மஹாதீபாராதனை செய்து பால் அபிஷேகம் கஞ்சி வார்த்தலும் நடைபெற்றது அங்காள பரமேஸ்வரி அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.