கேரளாவுக்கு கடத்தப்பட்ட 2400 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிற படகுகளுக்கான மண்ணைண்ணெய் அதிக அளவில் கேரளாவுக்கு கடத்துவதாக புகார் உள்ளது. தனிப்படையினர் மற்றும் போலீசார் சோதனை செய்து பறிமுதல் செய்தாலும், ஆட்சியர் பரிந்துரைகள், மற்றும் இதற்கான சட்ட வரைவுகள் பல கடத்தல் காரர்களுக்கு இதுவரையிலும் சாதகமாக இருப்பதால், மீண்டும் மீண்டும் கடத்தல் கொடி கட்டி பறக்கிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை புதுக்கடை வழியாக கேரளாவுக்கு மண்ணைண்ணெய் கடத்துவதாக புதுக்கடை தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் என்பவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் பார்த்திபபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மீன் கொண்டு செல்வது போல் வந்த ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் 70 கேன்களில், 2400 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டு, வாகனத்துடன் போலீல் நிலையம் கொண்டு வந்தனர். தொடர்ந்து விசாரணைக்கு பின் கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.