ரூ.246 கோடியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி துவக்கம்

சேலம் மாநகராட்சியில் ரூ.246 கோடியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

Update: 2024-02-26 01:45 GMT

பூமி பூஜை 

சேலம் மாநகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் விடுபட்ட பகுதிகளுக்கு ரூ.246.20 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் 20, 21, 22 மற்றும் 24 ஆகிய விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணியும், வார்டு 1, 2, 3, 23, 24, 25 மற்றும் அஸ்தம்பட்டி மண்டலத்தில் வார்டு 4, 5, கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 50, 51, 54, 57, 58, 59 ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணியும் ரூ.246.20 கோடி மதிப்பில் தொடங்குவதற்கு நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 18-வது வார்டில் ரூ.85 லட்சம் மதிப்பில் மெய்யனூர் நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் வளாகத்தில் பொருள் மீட்பு வசதி மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். அதேசமயம் சேலம் சூரமங்கலம் 18-வது வார்டில் நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், அருள் எம்.எல்.ஏ., ஆணையாளர் பாலச்சந்தர் ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

Tags:    

Similar News