மக்களுடன் முதல்வர் முகாமில் 2,490 மனுக்கள் - ராஜேஸ்குமார் எம்.பி தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் 2,490 மனுக்கள் பதிவு. - கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி தகவல்

Update: 2023-12-23 18:11 GMT

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகராட்சி வார்டு பகுதிகளுக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (தெற்கு), ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் நடைபெற்ற்து. இதனைத் தொடர்ந்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாமை பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இதையடுத்து மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் நாமக்கல் நகராட்சியில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் முகாமை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 18.12.2023 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சேவைகள், திட்டங்கள், பயன்கள் அவர்களுக்கு போய் சேர வேண்டும் என்கின்ற அந்த கருத்தின் அடிப்படையில், அரசாங்கம் பொது மக்களே தேடிச் சென்று அவர்களுடைய மனுக்களை குறைகளை பெற்று தீர்வு கண்டு நடவடிக்கை எடுத்து உரியவர்களுக்கான நிவாரணத்தை தேடி தருவது தான் மக்களுடன் முதல்வர் என்கின்ற அந்த சிறப்பு திட்டமாகும்.

இச்சிறப்பு திட்டத்தில் பொதுமக்கள் அரசின் உடைய பல்வேறு துறை சார்ந்த நிறைவேற்றப்படுகின்ற திட்டங்கள் காலதாமதம் இன்றி மக்களை விரைவாக சென்றடைய வேண்டும் என்பதே நோக்கமாகும். அந்த அடிப்படையில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகமானது நாமக்கல் மாவட்டத்தில் 39 இடங்களில் நடத்தப்படும் என்று திட்டமிடப்பட்டு இதுவரை 20 முகாம்கள் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. நாமக்கல் நகராட்சி, இராசிபுரம் நகராட்சி, திருச்செங்கோடு நகராட்சி, பள்ளிபாளையம் கொமாரபாளையம் ஆகிய 5 நகராட்சிகளில் அங்கு இருக்கின்ற மக்கள் தொகை அடிப்படையில், வார்டு அடிப்படையில் பல்வேறு கட்டங்களாக மக்களுடன் முதல்வருக்கான சிறப்பு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 18 பேரூராட்சிகளிலும் இந்த முகாம் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இதுவரை நடந்த முகாம்களில் 2,490 பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு அது முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 1,427 மனுக்கள் நகராட்சி அளவிலும் பேரூராட்சி பகுதியில் 1063 மனுக்களும் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் பெறும் மனுக்கள் பெற்று 30 நாட்களுக்குள் அவர்களுக்கு தீர்வு காணப்பட்டு அரசாங்கத்தின் மூலமாக வழங்கப்படுகின்ற அந்த சேவைகள் திட்டங்கள் ஆணைகள் உரிய முறையில் வழங்கப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். 



Tags:    

Similar News