25வது வார்டில் ஆய்வு மேற்கொண்ட மேயர்
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;
திருநெல்வேலி மாநகராட்சி 25வது வார்டு பகுதி முழுவதும் மேயர் ராமகிருஷ்ணன் இன்று (ஆகஸ்ட் 15) இரவு சைக்கிளில் சென்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது தெருவிளக்குகள் பழுதாகி இருப்பதை ஆய்வு மேற்கொண்டு உடனடியாக சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மேயரின் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.