25 ஆண்டுகளுக்கு முன்னாள் பயின்ற மாணவர்கள் சந்திப்பு!
பாலிடெக்னிக் கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு முன்னாள் பயின்ற மாணவர்கள் சந்திப்பு!;
நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு முன்னாள் பயின்ற மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் 1997 முதல் 2000 வரை 25 ஆண்டுகளுக்கு முன்னாள் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை தாங்கி முதன்மை உரை நிகழ்த்தினார். முன்னாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சாமுவேல் தியோடர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். நிறைவாக முன்னாள் மாணவர் பால்ராஜ் நன்றியுரை நிகழ்த்தினார். சிவில் துறை தலைவர் ரஞ்சன் குணராஜ் நிறைவு ஜெபம் செய்தார். நிகழ்ச்சிகளை முன்னாள் மாணவர் டேவிட் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் நினைவுப் பரிசுகள் வழங்கினர் . இந்த நிகழ்ச்சிக்கான கல்லூரி தாளாளர் ஓய்வுபெற்ற நீதிபதி ஜாண் சந்தோஷம், முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் முன்னாள் மாணவர்கள் அசாப் அலி, டேவிட், மாரி தங்கம், கோபால கிருஷ்ணன், இஸ்ரேல் பிரபு, ராக்லன்ட், லிங்கராஜ், ஜான்சன் ஐசக் மற்றும் ஆசிரியர்கள் வெலிங்டன், சாமுவேல்ராஜ் மற்றும் முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.