ஆவணமின்றி கொண்டு சென்ற ரூபாய் 2.5 லட்சம் பறிமுதல்
உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூபாய் 2.5 லட்சத்தை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்;
Update: 2024-04-01 08:33 GMT
ஆவணமின்றி கொண்டு சென்ற ரூபாய் 2.5 லட்சம் பறிமுதல்
சிவகங்கை - தொண்டி சாலையில் உள்ள அரைக்காசு அம்மன் கோவில் அருகே வேளாண் அலுவலர் சரஸ்வதி, சிறப்பு சார்பு ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அச்சமயம் காளையார்கோவிலை சேர்ந்த ஸ்டீபன்தாஸ் என்பவரது காரை சோதனை செய்தபோது அதில் சீட்டிற்கு அடியில் பள்ளியில் கட்டணம் கட்ட கொண்டு வந்த ரூ2.5 லட்சம் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணமின்றி கொண்டு வந்ததால் அதனை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து சிவகங்கையில் உள்ள மாவட்ட கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.