வாலிபரை தாக்கி 2.5 பவுன் செயின் பறிப்பு : ஒருவர் கைது!
தூத்துக்குடியில் வாலிபரை தாக்கி 2.5 பவுன் செயினை பறித்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6பேரை தேடி வருகின்றனர்.
Update: 2024-05-03 06:42 GMT
தூத்துக்குடியில் வாலிபரை தாக்கி 2.5 பவுன் செயினை பறித்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6பேரை தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள அணியாபர நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம் மகன் ஆனந்தராஜ் (27). இவர் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி முள்ளக்காடு கக்கன்ஜி நகரில் நடந்த கோவில் கொடை விழாவில் கலந்து காெண்டார். அப்போது மதுபோதையில் சிலர் ஆடிக் கொண்டிருந்தார்களாம். இதனை ஆனந்தராஜ் கண்டித்தாராம். இதனால் அந்த கும்பல் ஆனந்தராஜை அடித்து உதைத்து, அவர் அணிந்திருந்த 2.5 பவுன் செயினை பறித்துச் சென்று விட்டார்களாம். இதுகுறித்து அவர் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரமூர்த்தி வழக்குப் பதிந்து கக்கன்ஜி நகரைச் சேர்ந்த முனியசாமி மகன் முத்துபாண்டி (26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் 6பேரை போலீசார் தேடி வருகின்றனர்.