பணத்திற்கும் கணக்கிற்கும் முரண்பாடு ஏற்பட்டதால் ரூ.25.60லட்சம் பறிமுதல்
பணத்தில் இருப்புக்கும், கணக்கிற்கும் மாறுபாடு இருந்ததால் நிலைக் குழு கண்காணிப்பு ரூ.25.60 லட்சத்தை பறிமுதல் செய்து உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
தமிழகம் முழுவதும் இயங்கும் பிரபல தங்க நகை விற்பனை மையமாக செயல்பட்டு வரும் ஜி ஆர் டி ஜூவல்லரி காஞ்சிபுரம் கிளையில் இருந்து ரூபாய் 25.60 லட்சம் மதிப்பிலான பணம் சென்னை திருவான்மியூர் எச்டிஎப்சி வங்கியில், தலைமை அலுவலக கணக்கில் செலுத்த ஊழியர்கள் இன்று மதியம் ஒரு மணி அளவில் எடுத்துச் சென்றனர்.
வாலாஜாபாத் ரவுண்டானா அருகே சென்ற போது தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர் சகுந்தலா தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டினர். அவ்வழியாக வந்த நகைக்கடை வாகனத்தை நிறுத்தி சோதனை இட்ட போது அதில் ரூபாய் 25 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் இருப்பு இருந்ததாகவும்,
ஆனால் அதற்கான ஆவணங்களில் 29 லட்சம் என காட்டப்பட்டதால் இந்த மாறுபாடு குறித்து தகவல் ஊழியர்கள் சரிவர அளிக்காததால் அவ்வாகனத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் பாலாஜியிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து ஜி ஆர் டி ஜூவல்லரி நிறுவனத்தின் ஊழியர்கள் அதற்கான ஆவணங்களை எடுத்து வர சென்று ஓரிரு மணி நேரத்தில் அதை சமர்ப்பிப்பதாக தெரிவித்ததின் பேரில்,
தற்போது அந்த விசாரணை நடைபெற்று வருகிறது. கொண்டு சென்ற பணத்திற்கும் , அதற்கான ஆவணங்களில் குறிப்பிட்ட தொகையும் மாறுபாடு காரணமாகவே பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அலுவலர் தெரிவித்தார். மேலும் முறையாக ஆவணங்கள் செலுத்தாததால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் வைக்கப்பட்டது.