28 பைசா மோடி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஒன்றிய அரசு கடந்த 5 வருடத்தில் தமிழ் வளர்ச்சிக்கு எந்த நிதியும் வழங்கியது இல்லை இதுவரைக்கும் இந்த 5 வருஷத்துல வரியா 6.30 லட்சம் கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு கட்டி இருக்கிறோம். ஒன்றிய அரசுக்கு நாம் கொடுக்கக்கூடிய ஒரு ரூபாய் வரிக்கு நமக்கு திருப்பி கிடைப்பது 28 பைசா தான்.பிரதமர் நரேந்திர மோடியை 28 பைசா மோடி என தான் அழைக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2024-03-24 07:28 GMT

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

 அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவில் அருகே விருதுநகர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,

நாடாளுமன்ற தேர்தலில் ஏப்ரல் 19ஆம் தேதி நம்முடைய கூட்டணி கட்சி வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளரை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் ஜெயிக்க வைப்பீங்க என்ற அந்த நம்பிக்கை எனக்கு இருக்கின்றது சென்ற 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நமது கழக கூட்டணி வேட்பாளர் சகோதரர் திரு மாணிக்கம் தாகூர் அவர்களை 4,71,000 வாக்குகள் வாங்க வைத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்புனீர்கள்.

இந்த முறை குறைந்தது 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் உங்களுடைய தலைவர் யார் வேட்பாளரா அறிவிக்கிறாங்களோ கண்டிப்பா நீங்க ஜெயிக்க வைப்பீங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு உங்களுக்கு இருக்கா நிச்சயம் செய்வீர்களா அதே போல 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய கழகத்துடைய வேட்பாளர் இப்பொழுது நம்முடைய அமைச்சர் அண்ணன் கே கே எஸ் ஆர் ஆர் ராமச்சந்திரன் அவர்களே கிட்டத்தட்ட 95 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் ஜெயிக்க வச்சிருக்கீங்க இந்த தேர்தல் மிக மிக முக்கியமான ஒரு தேர்தல் 2024 தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தல் இதில் தேர்தல் பிரச்சாரத்துடைய தலைப்பு நம்முடைய மாநில உரிமைகளை மீட்க தலைவர் உடைய குரல். மாநில உரிமைகளை மீட்கணும் ஏன்னா கடந்த 10 வருஷத்துக்கு அதிமுக ஆட்சியில் நம்முடைய மாநில உரிமைகள் அத்தனையும் ஒன்றிய பாஜக அரசு கிட்ட அதிமுக அடிமைகள் அடகு வைத்துவிட்டார்கள்.

ஒன்றிய அரசு கடந்த 5 வருடத்தில் தமிழ் வளர்ச்சிக்கு எந்த நிதியும் வழங்கியது இல்லை இதுவரைக்கும் இந்த 5 வருஷத்துல வரியா 6.30 லட்சம் கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு கட்டி இருக்கோம் ஒன்றிய அரசுக்கு கொடுக்கக்கூடிய ஒரு ரூபாய் வரி கட்டினோம்னா நமக்கு திருப்பி எவ்வளவு தெரியுமா ஒவ்வொருத்தருக்கும் வெறும் 28 பைசா பிரதமர் நரேந்திர மோடிய 28 பைசா மோடி என தான் அழைக்க வேண்டும். மழை வெள்ளத்தில் தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டமே மூழ்கிவிட்டது ஆனால் பிரதமர் வரவில்லை.‌ நான் உங்க அப்பன் வீட்டு காசையா கேக்குறேன் என கேட்டேன். நிர்மலா சீதாராமன் என்னை கூப்பிட்டு மிரட்டினார்கள்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி ஒவ்வொரு குடும்பத்திற்கும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கினார். நீட் தேர்வால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். ஜெயலலிதா இருக்கும் வரையில் நீட் தேர்வு வரவில்லை.‌ இலவச மகளிர் பேருந்து சேவையால் மகளிர் மாதம் 900 ரூபாய் வரை மிச்சபடுத்துகிறார்கள்.‌ மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் பெட்ரோல் 75 ரூபாய்க்கு டீசல் 65 ரூபாய்க்கும் வழங்கப்படும்.‌ மத்திய பாஜக அரசு பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது.‌

பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் மகளிர் உரிமைத் தொகையில் உள்ள குறைகள் திறக்கப்பட்டு அனைவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.‌ ஐபிஎல் அணிகளை போல அதிமுகவில் எடப்பாடி அணி ஓபிஎஸ் அணி ஜெ‌ தீபா அணி ஜெ தீபா டிரைவர் அணி என பல அணிகள் உள்ளது. நமது இந்தியாவை காப்பாற்ற வேண்டும் தமிழகத்திற்கு விடியல் வழங்கியது போல இந்தியாவிற்கும் விடியல் வழங்க வேண்டும் கை சின்னத்திற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என பேசினார்

Tags:    

Similar News