தொகுதியில் 288 பதற்றமான வாக்குச்சாவடிகள் - ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 288 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது என்று தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-08 02:12 GMT

பதற்றமான வாக்குசாவடிகள்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 286 கவனிக்கத்தக்க (Vulnerable) வாக்குச்சாவடிகளும் 2 கூர்நோக்கக் கூடிய (Critical) வாக்குச்சாவடிகளும் ஆக மொத்தம் 288 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது இந்த வாக்குசாவடிகளில், 263 கவனித்தக்க வாக்குச் சாவடி அமைவிடங்களும், 2 கூர்நோக்க கூடிய வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆக மொத்தம் 265 வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் அமைந்துள்ளது.

இந்த வாக்குச் சாவடி அமைவிடங்களில், ஒரு மத்திய அரசு பணியாளர், நுண் பார்வையாளர் ஆகவும், மேலும், ஆறடி உயரளவு மற்றும் மத்திய படை காவலர் ஒருவரும் பணியில் இருக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. இவ்வறிவுரைக்கிணங்க பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட 265 அமைவிடங்களில் நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்திட ரேண்டம் முறையில் தேர்வு செய்திட தேர்தல் பொதுப் பார்வையாளர் முன்னிலையில் இன்று (06.04.2024) Micro Observer Randomization நடைபெற்றது. இதில், 318 நுண் பார்வையாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

                                                                       

Tags:    

Similar News