விவாகரத்துக்கு முன்பே 2வது திருமணம்; கணவர் மீது மனைவி புகார்

வேறொரு பெண்ணை திருமணம் செய்த கணவன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, பூந்தமல்லி காவல் நிலையத்தின் முன்பு மனைவி தர்ணா போராட்டம் செய்தார்.;

Update: 2023-12-22 12:58 GMT

வேறொரு பெண்ணை திருமணம் செய்த கணவன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, பூந்தமல்லி காவல் நிலையத்தின் முன்பு மனைவி தர்ணா போராட்டம் செய்தார். 

பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (30) என்பவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து திவ்யா கர்ப்பமான நிலையில், அவரை பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றவர், இதுவரை மனைவியையும், குழந்தையும் பார்க்க வரவில்லை எனவும், தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் பூந்தமல்லி காவல் நிலையத்தில் மனைவி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Advertisement

இது குறித்து போலீசார் விசாரணை செய்த நிலையில், திவ்யா தனக்கு திருமணமானபோது எடுத்துக்கொண்ட பெரிய அளவிலான புகைப்படத்தை கையில் வைத்தபடி, தனது உறவினர்களுடன் பூந்தமல்லி காவல் நிலையத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், தனது கணவர் தன்னைப் பிரிந்து சென்ற நிலையில், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், அதற்கு முன்பாக பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் புகார் வைத்துள்ளார். இந்த வழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வருவதால், தற்போது இந்த வழக்கானது பூந்தமல்லியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளது.

Tags:    

Similar News