3வது புத்தக கண்காட்சி குறித்த விழிப்புணர்வு பேரணி..

3வது புத்தக கண்காட்சி குறித்த விழிப்புணர்வு பேரணியினை திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சௌம்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

Update: 2025-01-22 12:57 GMT
திருவாரூர் புதிய ரயில் நிலைய வளாகத்தில், புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள எஸ்.எஸ். நகரில் எதிர்வரும் ஜனவரி 24 முதல் பிப்ரவரி 02 வரை நடைபெறவுள்ள 3வது புத்தக கண்காட்சி குறித்த விழிப்புணர்வு பேரணியினை திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சௌம்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். புத்தக கண்காட்சி குறித்த விழிப்புணர்வு பேரணியில் திரு.வி.க. அரசு கலை கல்லூரி மற்றும் குளோபல் கல்லூரியினை சேர்ந்த 250 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணியானது புதிய ரயில் நிலைய வளாகத்தில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. இந்நிகழ்வில் வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News