3வது படிக்கும் சிறுமிக்கு ஆசிரியை இரண்டு கன்னத்திலும் அறை

மயிலாடுதுறை தனியார் பள்ளியில் சுயதேர்வுக்காக படிக்கவில்லை என்று கூறி பெண் ஆசிரியர் கன்னத்தில் அடித்ததில் காயமடைந்த 3-ஆம் வகுப்பு மாணவி மயிலாடுதுறை அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை. காவல்துறையில் பெற்றோர் புகார்;

Update: 2025-03-15 11:11 GMT
. மயிலாடுதுறை தருமபுரம் சாலையில் உள்ள  தனியார் மெட்ரிக் பள்ளியில்   மணக்குடி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் செந்தில்குமார் என்பவரின் 2 மகள்கள் படித்துவருகின்றனர்,  அக்காள் 9ஆம் வகுப்பும் அவரது தங்கை பிரணவி 3-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பிரணவி வகுப்பில் நடக்கும் சுய தேர்வுக்கு 8 கேள்விகளுக்கு 5 கேள்விகளுக்கு படித்து எழுதி பார்த்துவிட்டு வகுப்புக்கு சென்றுள்ளார். மீதமுள்ள 3 கேள்விகளுக்கு மாணவிக்கு பதில் தெரியாததால் அறிவியல் ஆசிரியர் லோகிதா மாணவியை கன்னத்தில் திருகி கிள்ளியுள்ளதுடன் மறு கன்னத்தில் அறைந்துள்ளார்.  . வீட்டுக்கு வந்த மாணவி முகம் கன்றிப்போய் வீங்கியிருந்ததைக் கண்ட பெற்றோர் விசாரித்த போது படிக்கவில்லை என்பதால் ஆசிரியர் அடித்ததாக மாணவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பள்ளிநிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. கன்னம் வீங்கிய நிலையில்   மாணவியை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள்  தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக பெற்றோர்; சேர்த்தனர். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவரும் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டு அவரிடமும் அவரது பெற்றோரிடமும் புகாரைப் பெற்று சென்றுள்ளனர்.    பள்ளி நிர்வாகத்தினர் முறையாக பதிலளிக்கவில்லை என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் செந்தில்குமார் தெரிவித்திருந்தார்..  மாணவியை அடித்ததாக கூறப்படும் ஆசிரியை மீது நடவடிக்கை எடுப்பதாக பள்ளி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.    பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரி இன்று பள்ளிக்குச் சென்றபோது அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டனர். சமூக ஆர்வலர் வழக்கறிஞர் சங்கமித்திரன் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோரரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

Similar News