3 வயது சிறுமியை 17 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் போக்சோவில் கைது

சீர்காழி அருகே அங்கன்வாடியில் படிக்க சென்ற 3 வயது குழுந்தை பாலியல் பலாத்காரம். சத்தம் போட்டபோது கல்லாலல் அடித்ததில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை 17 வயது இளைஞர் போக்சோவில் கைது;

Update: 2025-02-25 10:48 GMT
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கூலித் தொழிலாளியின் மூன்றரை வயது மகள் அருகில் உள்ள அங்கன்வாடியில் பயின்று வருகிறார், மதியம் உணவு இடைவேளையின் காணவில்லை பொறுப்பாளர்கள் தேடிய போது அங்கன்வாடி கட்டிடத்துக்கு பின்புறம் உள்ள சந்து பகுதியில் சென்று பார்த்தால் குழந்தை தலை மற்றும் முகத்தில் பலமாக தாக்கப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியபடி கிடந்துள்ளார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்0 மேல் சிச்சியாக பாண்டிச்சேரி கொண்டு செல்லப்பட்டுள்ளார். அப்பகுதிக்கு வந்து சேர்ந்த 17 வயது சிறுவன் மீது சந்தேகப்பட்டனர் இதனையறிந்த மாவட்ட எஸ்பி ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். 17 வயது இளைஞரை பிடித்து விசாரணை நடத்தியபோது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்யும் போது குழந்தை அலறியதால் செங்கல்லை எடுத்து தலையில் தாக்கியது தெரியவந்தது. .இந்நிலையில் அந்த இளைஞரை சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.அங்கன்வாடி மைய பொறுப்பாளர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்

Similar News