அனுமதியின்றி குவாரி செயல்பாடு 3 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டம், வலையன்வயல் பகுதியில் அரசு அனுமதி இன்றி குவாரியில் வெடி வைக்கு முயன்ற மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-04-19 09:17 GMT
அனுமதி இன்றி செய்யப்பட குவாரி
திருமயம் தாலுகா வலையன்வயலில் அரசு அனுமதியின்றி குவாரிகள் செயல்படுவதாக திருச்சி மண்டல பறக்கும் படை உதவி இயக்குனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கனிம வளத்துறை உதவி இயக்குனர் செல்வசேகர் தலைமையிலான அலுவலர்கள் வலையன்வயலில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அரசு அனுமதியின்றி ஒரு குவாரியில் பாறைகளை உடைத்து வெடி வைக்க துளையிடும் பணி நடந்தது தெரியவந்தது. இதையடுத்து கல்குவாரி உரிமையாளர் அழகுசெம்பன், டிராக்டர் டிரைவர்கள் நல்லிப்பட்டியை சேர்ந்த ராசு (34), சின்னையா (40) ஆகியோரை கைது செய்து திருமயம் போலீசில் ஒப்படைத்தனர். மேலும், பாறைகளை துளையிடும் கம்ப்ரசர் டிராக்டர்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.