சேலத்தில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
சேலத்தில் நடந்த வாகன சோதனையில் அத்துமீறி ரேஷன் அரிசி கடத்த மூயன்ற 3 பேரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-06-13 05:06 GMT
சேலம் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சேலம் டவுன், அழகாபுரம் மற்றும் பெரியபுத்தூர் சுடுகாடு அருகே ஆகிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்கள் மற்றும் காரில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆட்டையாம்பட்டியை சேர்ந்த லிங்கேஸ்வரன் (வயது 27), இளம்பிள்ளையை சேர்ந்த அஜய்ஸ்ரீ (22), கந்தம்பட்டியை சேர்ந்த ஆதித்தியன் (24) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 750 கிலோ ரேஷன் அரிசி மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.