திருட்டு வழக்குகளில் 3 போ் கைது: 12 பவுன், ரூ.58 ஆயிரம் பறிமுதல்
திருச்சியில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்கில் தொடா்புடைய மூவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 12 பவுன் நகைகள் மற்றும் ரூ.58 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனா்.
Update: 2024-06-02 03:54 GMT
திருச்சி மாநகரில் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட நபா்களை பிடிக்க மாநகரக் காவல்துறை ஆணையா் காமினி உத்தரவின்பேரில், அனைத்து காவல்நிலைய போலீஸாரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில, பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய, ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியைச் சோ்ந்த சரவணன் (27), அமாவாசை (எ) கோவிந்தராஜ் (23), தெப்பக்குளம் பகுதியைச் சோ்ந்த பாலாஜி (27) ஆகிய மூவா் கைது செய்யப்பட்டனா். இவா்களிடம் இருந்து 12 பவுன் நகைகள் மற்றும் ரூ.58 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.