சேலம் அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டியில் ரூ.3¼ லட்சம் பறிமுதல்

சேலம் அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டியில் உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.3¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2024-04-18 06:52 GMT

சேலம் அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டியில் உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.3¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. சேலம் மாவட்டத்தில் வாக்காளர்களை கவருவதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் அம்மாபேட்டை சேர்மன் ராமலிங்கம் தெருவில் நேற்று முன்தினம் நள்ளிரவு பறக்கும்படை அதிகாரியான இளங்கோ தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

Advertisement

அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நடந்து சென்ற ஒருவரை பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையில், அவா் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 70) என்பதும், பிரிண்டிங் அலுவலகம் நடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் அவரிடம் ரூ.2 லட்சத்து 19 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு உரிய ஆவணம் இல்லாததால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வடக்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட தேர்தல் உதவி அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று பறக்கும் படையினரின் சோதனையின் போது நடந்த சென்ற ஒருவரிடம் ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் உதவி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News