திமுக தொழிலதிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது

தஞ்சாவூரில் திருவாரூர் மாவட்டச் சேர்ந்த திமுக தொழிலதிபர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை காவல் துறையினர் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

Update: 2024-06-13 06:49 GMT

பைல் படம்

தஞ்சாவூரில் திருவாரூர் மாவட்டச் சேர்ந்த திமுக தொழிலதிபர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை காவல் துறையினர் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம், சோழங்கநல்லூரைச் சேர்ந்தவர் கே. பாபு (48). திமுகவைச் சேர்ந்த தொழிலதிபரான இவர் காரைக்கால் துறைமுகத்தில் போக்குவரத்து வாகன ஒப்பந்ததாரராக இருந்து வந்தார். இவர் தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதுமனை புகுவிழாவில் பங்கேற்பதற்காக காரில் தனது மகன் பாலமுருகனுடன் திருவாரூரிலிருந்து தஞ்சாவூருக்கு முற்பகல் வந்தார்.  இவரை தஞ்சாவூர் ஞானம் நகரில் சிலர் வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதனால், பலத்த காயமடைந்த பாபு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகேயுள்ள சீதா நகரைச் சேர்ந்த ஏ. முருகேசன் (59), தஞ்சாவூர் அருகே வயலூர் ராமாபுரத்தைச் சேர்ந்த பி. சிவக்குமார் (48), கொண்டி ராஜபாளையத்தைச் சேர்ந்த கணேசன் (48) ஆகியோரை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், பாபுவுக்கும், முருகேசன், சிவக்குமார், கணேசன் ஆகியோருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்தது. மேலும், முருகேசன், சிவக்குமார், கணேசன் ஆகியோர் காரைக்கால் துறைமுகத்திலிருந்து நிலக்கரியை வாங்கி, அதில் எம்.சாண்ட்டை கலப்படம் செய்தது குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் பாபு புகார் செய்தார்.  இந்த முன் விரோதம் காரணமாக பாபு கொலை செய்யப்பட்டார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, முருகேசன், சிவக்குமார், கணேசன் ஆகியோரை காவல் துறையினர் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

Tags:    

Similar News