ஆம்பூர் அருகே கார் விபத்தில் தாய், மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தாய், மகன் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-01-22 06:30 GMT

விபத்துக்குள்ளான கார் 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புகளை உடைத்து எதிர் சாலையில் வந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேர் மோதியது இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

பின்னர் இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்ட போது, பெங்களூர் பகுதியை சேர்ந்த மாதவன் தனது மனைவி ரோஜா மகன்கள் சிவா, குமரேஷ் ஆகியோருடன் சென்னையில் சிவாவிற்கு பெண் பார்க்க சென்று விட்டு மீண்டும் கார் மூலம் பெங்களூர் திரும்பிய போது சிவா காரை ஓட்டிச்சென்றதாகவும், மேலும் மற்றொரு காரில் குடியாத்தம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் தனது மனைவி ரோஜா மற்றும் மகனுடன் மைத்திரேயன் ஆகியோருடன் தர்மபுரி சென்று விட்டு பின்னர் குடியாத்தம் வந்து கொண்டிருந்ததும், இரண்டு கார்களும் பச்சகுப்பம் பகுதியில் வந்த போது சிவா ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புகளின் மீது மோதி எதிர்சாலையில் சரவணன் ஓட்டி வந்த கார் மீது மோதியதாகவும், இதில் குடியாத்தம் பகுதியை சேர்ந்த சரவணன், பெங்களூரை சேர்ந்த தாய்,மகனான ரோஜா மற்றும் சிவா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும், காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.. மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த மாதவன், குமரேஷ், சாந்தி, ஆகியோர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மைத்திரேயன் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து நடந்த இடத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் ஆய்வு மேற்க்கொண்டார்...

Tags:    

Similar News