தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 3 பேர் வேட்பு மனு தாக்கல்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட இன்று வேட்பாளர்கள் 3 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

Update: 2024-03-23 02:18 GMT

வேட்பு மனு தாக்கல்

பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு இன்று வேட்டபுமனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி துவங்கியது. 20 ஆம் தேதி சுயேட்சை வேட்பாளர்கள் 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 2ஆம் நாளான நேற்று நாள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.  இந்நிலையில் இன்று 3வது நாளில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட நாம் இந்தியர் கட்சி வேட்பாளர் ஜெயகணேஷ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதியிடம் தனது வேட்பு மனுவை வழங்கினார். மேலும், சுயேட்சை வேட்பாளர் ஜெயகுமார் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  தொடர்ந்து, தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபர் பிபிஎம்டி பொன் குமரன் இன்று சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர்  என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 3 பேரும் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான கோ.லட்சுமிபதியிடம் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். தூத்துக்குடி தொகுதியில் இதுவரை 5 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை 23ஆம் தேதி சனிக்கிழமை, நாளை மறுநாள் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்கள் வேட்பு மனு தாக்கல் கிடையாது. 25 ஆம் தேதி திங்கட்கிழமை வழக்கம்போல் வேப்பமனு தாக்கல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News