இளம் பெண் தற்கொலை கணவர் உட்பட 3 பேர் கைது
மாமியார் வரதட்சணை கேட்டு தாக்கியதால் இளம் பெண் துாக்குப்போட்டு தற்கொலை. கணவர் உட்பட 3 பேர் கைது;
By : King 24x7 Angel
Update: 2024-02-19 06:53 GMT
இளம் பெண் தற்கொலை கணவர் உட்பட 3 பேர் கைது
சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ், 26; இவரது மனைவி சசிகலா, 24; இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சசிகலாவிடம் அவரது மாமியார் வரதட்சணை கேட்டு அடிக்கடி திட்டி, தாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த சசிகலா நேற்று முன் தினம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, இளம்பெண் தற்கொலைக்கு காரணமான சசிகலாவின் கணவர் விக்னேஷ், 26; மாமியார் பார்வதி, 50; சகோதரி சங்கீதா, 28; ஆகிய 3 பேரை கைது செய்தனர்.