நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது
தண்டராம்பட்டு கிழக்கு காப்பு காட்டில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-04-15 10:07 GMT
நாட்டு துப்பாக்கியுடன் திரிந்தவர்கள் கைது
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் வனச்சரகம் ராதாபுரம் காப்புக்காடு தண்டராம்பட்டு கிழக்கு காப்புக்காட்டில் சாத்தனூர் வனச்சரக அலுவலர் நா.சீனிவாசன் தலைமையில் வனவர்கள் சியாமளா, முருகன் வனக்காப்பாளர்கள் வெங்கடேசன், திலகவதி உள்ளிட்ட குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாட்டுத் துப்பாக்கியுடன் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக சுற்றித்திரிந்த 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.