வாளைக் காட்டி மிரட்டி வாலிபரை தாக்கி பணம் பறித்ததாக 3 பேர்கள் கைது

கோவில்பட்டி அருகே  வாளைக் காட்டி மிரட்டி வாலிபரை தாக்கி பணம் பறித்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனா்.;

Update: 2023-12-16 01:19 GMT

வாலிபரை தாக்கி பணம் பறித்ததாக 3 பேர்கள் கைது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அத்தைகொண்டான், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் முத்துப்பாண்டி (36). பெயிண்டரான இவரும், சக தொழிலாளியான கூசாலிபட்டியைச் சோ்ந்த சுரேஷ்குமாரும் வேலை முடிந்து பைக்கில் இலுப்பையூரணி ஊருணிக் கரை அருகே சென்று கொண்டிருந்த அவா்களை 3 போ் வழிமறித்து வாளைக் காட்டி மிரட்டி தாக்கியதுடன், ரூ. 500-ஐ பறித்துச் சென்றனராம்.  இதில், காயமடைந்த முத்துப்பாண்டி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, கதிரேசன் கோயில் தெருவைச் சோ்ந்த கோபால் மகன் அருண்குமாா் (31), மகாராஜபுரம் காலனியைச் சோ்ந்த சுடலைமணி மகன் மகாராஜா (37), சிந்தாமணி நகரைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் பாலகணேஷ் (32) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.
Tags:    

Similar News