சேலத்தில் மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் 3 பெண்கள் கைது
சேலத்தில் மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் 3 பெண்கள் கைது. காவலில் எடுத்து போலீசார் விசாரணை. 5 பவுன் நகை மீட்பு.
Update: 2024-04-11 01:52 GMT
சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்தவர் அலமேலு (வயது 60). இவர் கடந்த மாதம் நெத்திமேட்டில் இருந்து பழைய பஸ் நிலையத்துக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பெண்கள் சிலர் பறித்துவிட்டு சென்றுவிட்டனர். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அலமேலுவிடம் நகையை பறித்தது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த லட்சுமி, சின்னத்தாயி, காளியம்மன் என்பதும், அவர்கள் செல்வபுரம் போலீசாரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை இந்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். இதனிடையே லட்சுமி, சின்னத்தாயி, காளியம்மன் ஆகியோரை போலீசார் கோர்ட்டு மூலம் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களிடம் இருந்து 5 பவுன் நகை மீட்கப்பட்டது. விசாரணைக்கு பிறகு அவர்களை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.