குமரியில் தலைகீழாக ஓடி 3 உலக சாதனை - எம்.எல்.ஏ.  கோரிக்கை

உதயநிதி ஸ்டாலினை சந்தித்து அரசு சார்பில் உதவிகள் செய்து ஊக்கப்படுத்த வேண்டும் என கோரிக்கை - அமைச்சர் உறுதி

Update: 2024-02-25 10:23 GMT
அமைச்சரை சந்தித்த குமரி உலக சாதனையாளர்
குமரி மாவட்டம், மண்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் சேகர் (53) என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் முதுகு தண்டுவட பாதிப்புக்கு உள்ளானர்.விபத்தினால் இவருக்கு முதுகு தண்டுவடத்தில் கம்பிகளால் இணைப்பு கொடுக்கப்பட்டு இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டார்.பின்னர் பலர் உதவியுடன் தலைகீழாக நடக்கும் பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டார். முந்தைய உலக சாதனைகளை முறியடிக்கும் வகையில்,   2021 அன்று இவரது 51-வது வயதில்  87 விநாடிகளில் 62 மீட்டர் தூரம் தலைகீழாக ஓடி முதல் உலக சாதனை படைத்தார். மேலும்  12-2-2023 அன்று இவரது 53-வது வயதில் 2 - நிமிடங்களில் 92 - மீட்டர் தூரம் தலைகீழாக ஓடி இரண்டாவது உலக சாதனை படைத்தார். மீண்டும் அதே ஆண்டில் 2 - நிமிடங்களில் 100- மீட்டர்  தலைகீழாக ஓடி தனது  சாதனையை தானே முறியடித்து மூன்றாவது உலக சாதனை படைத்தார். இவை அனைத்தும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று, சான்றிதழும் பெற்றுள்ளார். இவரது உலக சாதனைகளை அறிந்த தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் சாதனையாளர்  சேகரை அழைத்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து அரசு சார்பில் உதவிகள் செய்து ஊக்கப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.அப்போது  சேகரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார். மேலும் பல உலக சாதனைகள் புரிவதற்கு அவருக்கு அரசு சார்பில் உதவிகள் செய்யப்படும் அமைச்சர் உறுதி கூறினார்.
Tags:    

Similar News