ரூ.30 லட்சம் மதிப்பில் வெள்ள நிவாரணப் பொருட்கள்
கோவையில் இருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.;
Update: 2023-12-22 09:40 GMT
கோவையில் இருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கோவை சுகுணாபுரம் மையில்கள் பகுதியில் இருந்து கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அதிமுக மதுக்கரை நகர கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 30 லட்சம் மதிப்பிலான போர்வைகள், பிஸ்கட்கள்,ரொட்டிகள், குடிதண்ணீர் மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வெள்ள நிவாரண பொருட்களை சுகுணாபுரம் மையில்கள் பகுதியில் இருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் வாகனத்தில் கழக தொண்டர்களும் உடன் பயனித்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரணபொருட்களை வழங்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், முன்னாள் கிணத்துகடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், மதுக்கரை நகரக் கழகச் செயலாளர் சண்முகராஜா, மற்றும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட விவசாயிகள் பிரிவு செயலாளர் மகாலிங்கம் உட்பட கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் உட்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.