இளைஞரணி மாநாட்டில் சீருடையில் 30 ஆயிரம் சேலம் திமுகவினர் - செல்வகணபதி

Update: 2023-12-03 04:13 GMT

முன்னாள் அமைச்சர் செல்வகணபதி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.எம்.செல்வகணபதிக்கு நகர எல்லையில் நகர செயலாளர் டி.எஸ்.எம்.பாஷா தலைமையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து எடப்பாடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் பிறந்த குழந்தைக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தங்க மோதிரத்துடன் வருங்கால வைப்பு நிதியினை முன்னாள் அமைச்சர் செல்வகணபதி வழங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், பூவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

இதனை தொடர்ந்து டி.எம் செல்வகணபதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- தி.மு.க.வினருக்கு புதிய எழுச்சியும், புத்துணர்ச்சியும் ஊட்டும் வகையில் பிரம்மாண்டமாக டிசம்பர் 17-ந் தேதி சேலம் அடுத்த பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனையின் கீழ் பல்வேறு ஆயத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டில் சேலம் மேற்கு மாவட்டத்தில் இருந்து சுமார் 30 ஆயிரம் இளைஞர்கள் தி.மு.க. சீருடை அணிந்து மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். அதற்கான சீருடை தயாரிக்கும் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News