துணை மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு – 302வது நாளாக போராட்டம்

திருப்பூர் அருகே துணை மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று 302 வது நாளாக கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-03-11 02:35 GMT

காத்திருப்பு போராட்டம்

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, காவுத்தம்பாளையம் கிராமம், குமரிக்கல்பாளையத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலையே நம்பி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் நூறு ஏக்கர் பரப்பளவில் 765 கிலோவாட் துணைமின் நிலையம் அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த துணை மின் நிலையம் அமைக்கும் போது இப்பகுதியில் உள்ள 3 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதோடு விவசாயம் மற்றும் கால்நடைகள பாதிக்கப்படும் என்றும் எனவே இந்த திட்டத்தை இப்பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கூறி இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையம் பகுதியில் இன்று 302 வது நாளாக காவுத்தம்பாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள பொதுமக்களையும், விவசாயிகளையும் காப்பாற்ற கோரியும், இத்திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யக் கோரியும் இந்தப் பகுதியில் ஒன்றரை கி.மீ., சுற்றளவிற்கு அரசு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் முழுவதும் அகழ்வு ஆராய்ச்சி மேற்கொண்டால் பல வரலாற்றுச் செய்திகள் குறியீடுகளை மீட்டெடுக்க முடியும் என தெரிவிக்கும் இப்பகுதி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News