நாமக்கல் , சக்தி கணபதி ஆலயத்தில் 31ம் ஆண்டு விழா
நாமக்கல் , சக்தி கணபதி ஆலயத்தில் 31ம் ஆண்டு விழா நடந்தது. கணபதிக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-05 11:59 GMT
சக்தி கணபதி ஆலயத்தில் 31ம் ஆண்டு விழா
சக்தி கணபதி ஆலயத்தில் 31ம் ஆண்டு விழா
சக்தி கணபதி ஆலயத்தில் 31ம் ஆண்டு விழா
நாமக்கல்,ஏ.எஸ்.பேட்டை சக்தி விநாயகர் கோவில், 31 ஆண்டு விழாவை முன்னிட்டு, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தக்குடம் எடுத்து வந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு, 108 வலம்புரி சங்காபிஷேகம் வேள்வி மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பிறகு சக்தி கணபதிக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பகல் 12 மணிக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.