பொள்ளாச்சியில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை 32 கோடி பறிமுதல்..
பொள்ளாச்சியில் பிரபல கோழிப்பண்ணை தலைமை அலுவலகம் உள்ளிட்ட நான்கு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் விடிய விடிய நடந்த சோதனையில் 32 கோடி பறிமுதல் என தகவல்.
பொள்ளாச்சியில் பிரபல கோழிப்பண்ணை தலைமை அலுவலகம் உள்ளிட்ட நான்கு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் விடிய விடிய நடந்த சோதனையில் 32 கோடி பறிமுதல் என தகவல்.
பொள்ளாச்சி - ஏப்ரல் - 09 கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் அருள் முருகன் மற்றும் சரவண முருகன் இவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள்.இவர்கள் இருவரும் கோவை மாவட்டம் அல்லது தமிழகம் முழுவதும் MBS ஹேட் சரீஸ் என்னும் பெயரில் கோழி தீவனம் மற்றும் கோழிப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு முதல் தமிழக முழுவதும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில் பொள்ளாச்சி வெங்கடேசா காலனி பகுதியில் உள்ள MBS நிறுவனத்தின் நிர்வாக தலைமை அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் நேற்று இருந்து தற்போது வரை சுமார் 20 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்.சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த வருமானவரித்துறை அதிகாரி சக்திவேல் தலைமையில் இரவு முழுவதும் சோதனை நடத்தி வந்த நிலையில் பொள்ளாச்சி அலுவலகத்தில் வைத்திருந்த சுமார் 32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக பறிமுதல் செய்யப்பட்ட 32 கோடி பணத்தை பொள்ளாச்சியில் உள்ள எஸ் பி ஐ பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மேலும் பொள்ளாச்சி நகர் பகுதியில் அமைந்துள்ள MBS நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதனால் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.