சேலம் தெற்கு சட்டசபை தொகுதியில் 330 தபால் ஓட்டுகள் பதிவு
சேலம் தெற்கு சட்டசபை தொகுதியில் 330 தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
உதவி தேர்தல் அலுவலர்
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக தேர்தலில் நேரடியாக வந்து வாக்களிக்க முடியாத 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சேலம் நாடாளுமன்ற தொகுதியில் நேற்று தபால் ஓட்டுப்பதிவு தொடங்கியது. சேலம் தெற்கு சட்டசபை தொகுதியில் முதல் நாளில் 330 பேர் தபால் ஓட்டு போட்டதாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார். இதையடுத்து வாக்குச்சீட்டுகள் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
பின்னர் அங்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பெட்டிகளில் அடுக்கப்பட்டு பாதுகாப்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்துக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலச்சந்தர் அனுப்பி வைத்தார்.